Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் வேளையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு நல்ல எதிர்காலம் வேண்டுமெனில் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த அணியை பாராளுமன்றத்தில் நியமிக்குமாறு கோருவதாக தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐ.எம்.எப் உடன்படிக்கையை நிராகரித்த NPP அரசு , தற்போது ஐஎம்எப் உடன் சந்தித்து அதற்கேற்ப செயல்படுவது குறித்து ஆலோசித்து வருகிறது. அவற்றில் ஏதேனும் திருத்தங்கள் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது.

மேலும், IMF உடன்படிக்கை, அரசாங்கத்தின் கொள்கை, அரசாங்கத்தின் பார்வையில் IMF மற்றும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி அவர்கள் நாட்டிற்கு விளக்கமளிக்க வேண்டும்.

இதைப் பற்றி அறிக்கை விடுவதற்குப் பதிலாக, பிறரைக் குற்றம் சாட்டுவதும், அவதூறாகப் பேசுவதும்தான் ஜனாதிபதியின் கடமையாக உள்ளது… ராஜபக்ஸேக்களும் இதை தான் செய்தார்கள் என ரணில் மேலும் தெரிவித்தார்.

Share: