Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கடந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவர்களை ஆதரித்து ஊழலுக்குத் துணை போன எவருக்கும் தேசிய மக்கள் சக்தியில் அமைச்சர் பதவி கிடைக்காது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு ஒருவிதமாகவும் பணம், பொருள் படைத்தவர்களுக்கு அவை வேறு விதமாகவும் கடந்த காலங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

எனவே, அனைவருக்கு நீதி சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் நாடாளுமன்றத்திற்கு ஊழலற்றவர்களைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவது கடினம் என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னால் முடியுமானவற்றைச் செய்யும்.

தற்போது டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்து அமைச்சுப் பதவியைப் பெறப்போவதாகக் கூறுகிறார்.

அதே போல சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும் ஜனாதிபதியைச் சந்தித்து தமது நண்பர்கள் ஆதரவாளர்களுக்கு ஜனாதிபதி தமக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறுகின்றனர்.

எவ்வாயினும், தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

Share: