Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (7) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் எனத் தகவல் கிடைத்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு எதிராக அவர் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்தத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் என். ஜேசுதாசன் ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ரிட் மனுவை, சோபித ராஜகருணா தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, நீதிமன்றில் முன்னிலையாகி, தனது கட்சிக்காரரை சந்தேக நபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியங்களை உரிய முறையில் மதிப்பீடு செய்யாமல் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

அதனையடுத்து, மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா மேலதிக காரணிகளை முன்வைக்க உள்ளார்.

Share: