Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பிரதேச செயலகப் பிரிவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பீ.எம்.பீ. அதபத்து தலைமையில் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கிராமம் தித்தவேல்கிவுல இந்திய மாதிரி கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளதோடு இந்த கிராமம் 1.1206 ஹெக்டேயர் (02 ஏக்கர்) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வீடுடன் ஒரு நபருக்கு 15 பேர்ச்சிற்கு குறையாத காணி வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 24 ஆகும். நீர், மின்சாரம் மற்றும் உள்ளக வீதி அமைப்பு கொண்ட இக்கிராமத்திற்கு 44,494,678.00 ரூபா செலவிடப்பட்டுள்ளது.இக்கிராமத்தை நிர்மாணிப்பதில் பயனாளிகளின் பங்களிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரதேச செயலகம், பிரதேச சபை என்பனவும் பங்களித்துள்ளன.
இக்கிராமத்தின் நிர்மாணப்பணிகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 05 இலட்சம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து தலா 1 இலட்சம் ரூபாவும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. உள்கட்டமைப்பு அபிவிருத்திற்காக மின்சார சபை 800,000 செலவையும், குளிரூட்டும் நீர் திட்டத்திற்கு 4,071,328 செலவையும் செய்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம்.ரணதுங்க மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ. ஜானக உள்ளிட்ட   அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share: