அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார்.
அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் 51.4 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். ஜனாநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸ் 47.0 சதவீத வாக்குகளைப் பெற்று பின் தங்கியுள்ளார்.