பயன்படுத்தும் எரிபொருட்களினது விலைகளையே குறைத்திருக்கிறார். உழைக்கும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகளை இவர் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொய்யான அரசியல் அலங்கார ஆட்சியையே முன்னெடுத்து வருகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளார். வரியைக் கூட குறைக்க இவரால் முடியாது போயுள்ளது.இந்த ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை நீர்மூலமாக்கி, ஊடகங்களுக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க முற்படுகிறார் என்று சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
🟩 திசைகாட்டி ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சிக்கு முயற்சிக்கிறார்.
ஊடகங்கள் ஜனநாயக ஆடையை அணிந்து கொள்ள வேண்டும் என அச்சுறுத்தும் ஜனாதிபதி, சர்வாதிகார ஆட்சிக்கு முயற்சிக்கிறார். ஒரு கட்சி மூலம் ஆட்சியை கொண்டு வந்து எதிர்த் தரப்பினரின் கருத்துகளை ஒழிக்க நினைத்தால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.