முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை இதுவே முதல்தடவை.
முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் நாட்டின் அரசியலின் தற்போதைய நிலை அது செல்லும் பாதை தனது எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை தேசிய பட்டியல் மூலமும் நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.