Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.


அனைத்து பார்மெடிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்: மெக்கல்லத்துக்கு புதிய பொறுப்பு
நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் அனைத்து ஃபார்மெட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் டெஸ்ட் பார்மெட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில், தற்போது ஒயிட் பால் அணிகளுக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2022-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வருகை பிறகு ‘பேஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது. அதாவது டி20 போட்டி போல் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ஆக்ரோஷம், அதிரடி என்பதே அதன் பொருள். கிட்டத்தட்ட மெக்கல்லம் ஒரு வீரராக எப்படி விளையாடுவாரோ, அதனை பயிற்சியாளராகவும் சொல்லிக் கொடுத்தார். இந்த ‘பேஸ்பால்’ முறையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக, மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் காம்போ ‘பேஸ்பால்’ ஆட்டத்தால் கிரிக்கெட்டில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தன.

இந்த நிலையில் தான் பிரென்டன் மெக்கல்லம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இங்கிலாந்து தோல்வியை தழுவியதன் எதிரொலியாக அந்த அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக இருந்த மேத்யூ மோட் ராஜினாமா செய்தார்.

அவரின் ராஜினாமாவுக்கு பிறகே தற்போது அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை வரை மெக்கல்லம் பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share: