நாட்டின் நலனுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன் விளைவாக புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டுள்ளது என்று கூறிய அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அதன் வரலாற்றுடன் தொடர்பை இழந்துவிட்டதாகவும், அவர்களின் கடந்த காலத்தை ஒப்புக்கொள்ளாமல் முன்னேறுவது அவர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பத்தரமுல்ல மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை நாட்டுக்கு என்ன பங்களித்தன? தமிழ் கட்சிகளின் வாக்குகளை திருட முயன்று பிடிபட்ட SJB இப்போது யாழ்ப்பாணத்திற்குள் நுழையக்கூட போராடுகிறது. அரசியல் கட்சிகள் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும். NPP யும் கடந்த காலத்தை மறந்துவிட்டது, அதை ஒப்புக்கொள்ளாமல் முன்னேற முடியாது. 1971 ஆம் ஆண்டை அவர்கள் நினைவிலிருந்து அழித்துவிட்டதாகத் தோன்றுவதால், அவர்களின் வரலாற்று மறதி தெளிவாகத் தெரிகிறது. அத்தகைய குழுவுடன் நாம் போராட வேண்டும். ஜனாதிபதி கூறினார்.