உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (28) காலை கூடியது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,
“நீதிமன்ற தீர்ப்பால், அடுத்ததாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த செயற்பட வேண்டும். மற்ற தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எப்படி செய்வது என்று இன்று ஆலோசித்தோம். இன்னும் திகதி கலந்துரையாடப்படவில்லை” என்றார்.