கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உட்பட, ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐப்பானிய பிரதிநிதிகளின் தலைவர் கலாநிதி இசும் ஹிரோட்டோ (Dr. IZUMI Hiroto) நேற்று (18) தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மிகக் குறுகிய காலத்தினுள் நிறைவேற்றியிருப்பதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கை பிரதிபலிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.