ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த மனுவை தொடர வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதனை மீளப் பெற அனுமதிக்குமாறு டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, மனுவை மீளப் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.