சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இன்று சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக இன்று (16) கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களைக் கொண்டு வர முடியும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.