சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் உப குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கல்வி அமைச்சு இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்பித்தது.