நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு இன்று (09) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.