பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.
இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன.
இன்னும் 93 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகவேண்டியுள்ள போதும், ஆட்சியமைக்க அவசியமான 326 ஆசனங்களைத் தொழிலாளர் கட்சி கடந்துள்ளது.
அதன்படி, புதிய பிரித்தானிய பிரதமராக கீர் ஸ்டார்மர் நியமிக்கப்படுவார்.
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.