லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்த விலை குறைப்பு அமுலாகிறது.
அதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 215 ரூபாவாகும்.
சிவப்பு பருப்பு 14 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 282ரூபாவாகும்.
வெள்ளை சீனி 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 269 ரூபாவாக பதிவாகியுள்ளது.