இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு, பிணைதாரர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஒன்று அல்லது பல தொடர் வெகு சாதாரணப் பிணைமுறி அம்சங்களின் அடிப்படையில், நிர்வாக – இணைப் பிணையங்களுக்கான சட்டகத்தை உருவாக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பதில் முன்னோக்கி நகர்வதற்கான இணக்கப்பாட்டை இலங்கை பெற்றுள்ளது.
இது நிதி நெருக்கடியிலிருந்து இலங்கையின் மீட்சிக்கான முக்கிய படியாகக் கருதப்படுகிறது.