Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை – இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று இலங்கை வந்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், கல்வி இராஜங்க அமைச்சர் அரவிந்த குமார் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா எப்போதும் பலம் மிக்கதாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் தான் இலங்கையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என ஜெய்சங்கரிடம் தெரிவிக்கப்பட்டது என த.மு.கூ. பிரதி தலைவர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

Share: