இபலோகம பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புஞ்சிக்குளம், இபலோகம பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய இரேஷா மதுமாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழக்கும் போது ஒரு குழந்தை மட்டுமே அங்கு இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.