கொட்டகலை ரயில் பாதையில் பயணித்த ஒருவர் இன்று (17) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
கொட்டகலை, ஜயசிறிபுர பிரதேசத்தை சேர்ந்த செல்வம் லோகேஷ் என்ற 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.