கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற சிறுமியே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
தந்தை குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோதுஇ வீட்டின் முன்புறம் முப்பது அடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் விழுந்தது.
பின்னர் குழந்தையை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த வைத்தியசாலையில் இருந்து குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.