பண்டாரகம, கொத்தலாவல, உயன்வத்த குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரகம, ரைகம, உயன்வத்தை வீதியைச் சேர்ந்த நிவிதி கலகே சிரில் என்ற 82 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நேற்று (15) வீட்டை விட்டுச் சென்றதாகவும், அன்றைய தினம் அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.