டுபாயில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ‘அஹுங்கல்லே லொக்கு பெட்டி’யின் மூன்று பிரதான சீடர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து நேற்று (09) கஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்த வீதி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் குஷ் போதைப் பொருட்களும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீரவில, பாதுக்க, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 24, 28 மற்றும் 48 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.