இலங்கைக்கு வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மான்செஸ்டர் சிகரெட்டுகள் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று (04) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஐந்து இலட்சம் பெறுமதியான 6,000 சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கொலன்னாவையைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.