சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டொக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல பிராண்டுகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் டிக்டொக் கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
அவற்றில் சிஎன்என் மற்றும் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலமான கணக்குகளும் உள்ளடங்குகின்றன.