நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி 06 மாவட்டங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், காலி மாவட்டத்தில் 02 பேர், கம்பஹா மாவட்டத்தில் 02 பேர், களுத்துறை மாவட்டத்தில் 02 பேர், கேகாலை மாவட்டத்தில் ஒரு மரணம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.