வொஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு சீனாவில் இருந்து ஒரு ஜோடி ராட்சத பாண்டாக்கள் விரைவில் வருகை தரவுள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு வயது ஆண் பாண்டாவான பாவோ லியும், இரண்டு வயது பெண் பாண்டாவான குயிங் பாவும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளன.
பாண்டாக்களின் வருகை, முதல் பெண்மணியான ஜில் பைடன் பங்கேற்கும் காணொளியின் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நேரத்தில், இந்த பாண்டாக்களை வழங்கி இருப்பது சிறப்பம்சமாகும்.