பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் ஒருவரை நிகவெரட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிகவெரட்டிய கபல்லேவ மகா வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய 17 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறித்த அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையில் இந்த மாணவிக்கும் அதிபருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய அதிபர் நிகவெரட்டிய பொலிஸாரால் நேற்று (30) பிற்பகல் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் இன்று நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.