பலாங்கொடை, வேவல்வத்த, படேவல ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
வேவல்வத்த – பெல்லன்கம பிரதேசத்தைச் சேர்ந்த பி.டி. தயாவதி என்ற 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி தனது மகளின் வீட்டுக்குச் சென்று மீள தனது வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற அவர், வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் வேவல்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து வேவல்வத்த பொலிஸார் பிரதேச மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
சீரற்ற காலநிலை மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பால் மீட்பு பணிகளை தொடர முடியாமல் இருந்த சந்தர்பத்தில் குறித்த பெண்ணின் சடலம் ஆற்றில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வேவல்வத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசான்த ஜயதிலக்க தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.