திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவில் நேற்று (23) காலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கார் சேருநுவரயிலிருந்து சேருகல் நோக்கி ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை முதல் மட்டக்களப்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி தூங்கியதால் கார் வீதியை விட்டு கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சலம்பட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.