எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
எல்பிஎல் போட்டியின் நேர்மை மற்றும் தரத்தை பாதுகாப்பதற்காக தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா பிரிமியர் லீக் இடைநிறுத்தியது.
எதிர்காலத்தில் அதன் உரிமையில் மாற்றத்துடன் போட்டிகள் நடத்தப்படும் என உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.