Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மலையாள படத்தில் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம்பெற்றிருந்தது.

அத்திரைப்படம் கேரளாவை விட தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதியின்றி குணா படப் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமைச் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜா இசையில் உருவான ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.

இதன்போது கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share: