Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்னொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயதுடைய உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டபோது, இவரிடமிருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது.

இந்தக் கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவுக்கும் அதிகமென சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பயணப்பையில் மிளகாயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.

சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share: