Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தின் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கு ஜனாதிபதி எலன் மஸ்க்குடன் இலங்கையில் Starlink திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

உலகளாவிய Starlink வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share: