Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றார். பின்னர் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share: