Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இபோச பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றி வந்த 39 வயதுடைய சாரதியே இவ்வாறு பேருந்தை செலுத்தியாவறு உயிரிழந்தார்.

நேற்று (15) பிற்பகல் நுவரெலியாவிலிருந்து திம்புல பத்தனை ஊடாக நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகளை வேறு பேருந்திற்கு மாற்றிய பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், பேருந்தின் தொழில்நுட்ப கோளாரை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் மீண்டும் நாவலபிட்டி நோக்கி பேருந்தை செலுத்திய போது சாரதிக்கு திடீரென நோய் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் நடத்துனர் லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதியை சாரதி இருக்கையில் இருந்து இறக்கி லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Share: