Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

குளியாபிட்டிய – கபலேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் தொடர்பில் ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இவர் கடந்த 22 ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

காணாமல் போவதற்கு முன்னர் சுசித சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதவின் நண்பர் கூறும் போது, செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு சிங்கிதி என்ற நபர் எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது என்றார்.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share: