Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரதுஇ வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று (22) அவர் விடுதியில் உள்ள குளியலறைக்குச் சென்ற நிலையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தாயின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில்இ அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share: