Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு இடம்பெற்ற விசேட அபிஷேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளியாக அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.

அதற்கமைய,குறித்த சேலையை 16 இலட்சம் ரூபா கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share: