Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கள்ளக் காதலியின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்றவர் அருகில் உள்ள வீட்டின் முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் நேற்று (17) காலை கண்டெடுக்கப்பட்டதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பிரிவென வீதி, போபெத்த, ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபரும், சடலம் மீட்கப்பட்ட வீட்டில் வசிப்பவரும் கடந்த 16ஆம் திகதி இரவு மது அருந்திக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அன்றிரவு அவர் தனது கள்ளக்காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், பின்னர் தாம் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கச் சென்றதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

காலையில் எழுந்து பார்த்த போது, கள்ளக்காதலியின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிய நண்பன், தனது வீட்டு முற்றத்தில் உயிரிழந்து இருப்பதைக் கண்டு பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share: