Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நேற்று (17) நடந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் லோரா வோல்வர்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

ஒருநாள் போட்டி ஒன்றில் பெண்கள் கிரிக்கட் அணி கடந்து சென்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

அதனடிப்படையில் இதற்கு முன்னர் நியுஸிலாந்து மகளிர் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா மகளிர் 6 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்கள் பெற்றிருந்த சாதனையை இலங்கை மகளிர் அணி முறியடித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

இதேவேளை போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் சமரி அத்தபத்து பெற்றார்.

Share: