Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

வீட்டு செல்லப்பிராணியான பூனையால் மைத்துனர்கள் இருவருக்கிடையில் நடந்த தகராறில் பெண் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஒருவர் புத்தாண்டுக்காக உப பொலிஸ் பரிசோகரான மைத்துனரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த நீதிபதி, மேற்படி உப பொலிஸ் பரிசோதகரின் சகோதரியையே திருமணம் செய்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று மாவட்ட நீதிபதி தனது மனைவியுடன் வீட்டில் வளர்க்கும் பூனையுடன் மைத்துனரான உப பொலிஸ் பரிசோதகரான மைத்துனரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த நாள் வீடு திரும்ப முற்பட்டபோது தமது பூனை காணாமல் போயுள்ளதை குறித்த நீதிபதி அவதானித்துள்ளார்.

அதன் பின் இது தொடர்பில் மைத்துனர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சந்தர்ப்பத்தில் உப பொலிஸ் பரிசோதர் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி கன்னத்தில் அரைந்ததாகவும் நீதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்மீமன பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு வீட்டிற்கு வந்து சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த போது நீதிபதியின் மனைவி அதிர்ச்சியில் கிழே விழுந்த நிலையில் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

நீதிபதியை தகாத வார்த்தைகளில் திட்டி கண்ணத்தில் அரைந்ததாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் சந்தேகத்தின் பேரில் அக்மீமன பொலிஸார் கைது செய்யப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான பூனை நீதிபதியின் காரில் இருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது.

Share: