Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கம்பளை, மஸ்கொல்ல, மொரஹேன பிரதேசத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

38 வயதுடைய பெண்ணும், அவரது 16, 13 மற்றும் 10 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (15) கம்பளை, பன்விலதன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியை மற்றுமொரு குழுவினருடன் சென்று அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சி முடிந்து இன்று (16) அதிகாலை வீட்டுக்கு வந்த பின்னர், தொலைபேசி அழைப்பு தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மனைவி அதிகாலை மூன்று மணியளவில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததையடுத்து, மூன்று பிள்ளைகளும் அதே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் காலை 6 மணியளவில் கணவரிடம் இதுபற்றி கூறியதையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலில் பன்விலதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் மூன்று மகன்கள் பின்னர் கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share: