Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

வலிகாமம் வடக்கு, வயாவிளான், திக்கம்புரை, ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ்.நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு சென்றிருந்த சமயம் குறித்த பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் போக்குவரத்து பிரச்சினையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் குறித்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பணிப்புக்கமைய வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு குறித்த சேவையை முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கமைய குறித்த பேருந்து சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.

பேருந்து சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பழை வைத்தியசாலையை அடைந்து முமுளு வீதி வழியாக யாழ் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: