Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில், மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 இடங்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 5,580 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 510 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 இராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share: