யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று காலை சட்டவிரோதமாக 8 மாடுகளைக் கடத்தி செல்லும் போது யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் போது பண்ணையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.