Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2024 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் உலகில் எங்கும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை இடம்பிடித்துள்ளது.

உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்கள் மற்றும் உணவு, கலாச்சாரம் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மதிப்புரைகளை வழங்கும் timeout இணையத்தளத்தால் இந்தச் சான்றிதழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பலான பெண்கள் தனியாக வெளிநாடு செல்வதற்கு ஆசைப்படுவதாகவும், பெண்கள் தனியாகச் செல்லும் பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, தனியாகப் பயணிப்பவர்களுக்கான இடங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​பாதுகாப்பான தங்குமிடம், நன்கு நிறுவப்பட்ட சாலைகள், நாட்டின் மக்கள் மற்றும் சமூக தொடர்பு, அத்துடன் ஓய்வு நேரத்தை செலவிடும் திறன் போன்ற காரணிகள் கருதப்படுகின்றன.

இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடான இலங்கை, தெற்காசியாவில் வசீகரமான நாடாக timeout இணையத்தளத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கான சிறந்த இடமாக இலங்கை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுகம்பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ ஆகிய இடங்கள் பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற கடற்கரைகள் என பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கைக்குப் பிறகு, போர்த்துக்கல், செக் குடியரசு, ஜப்பான், க்வாத்தமாலா, வியட்நாம், அவுஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கு உகந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share: