பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்த வருடத்திற்கான பாதீட்டு யோசனைக்கு அமைய பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்பிக்கப்பட்டது.
புதிய கிராமிய அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வசித்துவரும் 4,151 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த குடும்பங்கள் தற்போது நிரந்தரமாக வாழும் காணிகளுக்கான அளிப்பு உறுதிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.