Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கடந்த 27 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.

போட்டியில் மும்பை அணி வீரரான ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை கொண்டாடிய ஒருவர், தனது நண்பராலேயே அடித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

மராட்டியத்தின் கோலாப்பூர் நகரில் அனுமந்த்வாடி கிராமத்தில், இந்த போட்டியை பார்ப்பதற்காக கொலையுண்ட நபரான பந்தோபண்ட் திபிலே (வயது 63) என்பவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு திபிலேவின் மற்றொரு நண்பரான பலவந்த் ஜாஞ்ஜே (வயது 50) என்பவரும் வந்துள்ளார்.

இருவரும் நண்பரின் வீட்டில் ஐ.பி.எல். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது, ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததை கொலையுண்ட நபர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரோஹித்தின் ரசிகரான சந்தேக நபர் திபிலேவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், வீட்டுக்கு சென்ற சந்தேக நபர் சிறிது நேரத்திற்கு பின் தனது மருமகன் சாகர் என்பவரை அழைத்து கொண்டு சென்று திபிலேவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் மயங்கி தரையில் சரிந்த திபிலே அயலவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share: